வல்லம், செப்.10: பூதலூர் நால் ரோட்டில் கலியபெருமாள் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சக்திவேல் வரவேற்றார். மூவேந்தன், பரமசிவம், சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரபு, திருநாவுக்கரசு, தமிழரசன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். வளரும் தமிழக கட்சி மாநில பொதுச்செயலாளர் இமான் சேகர் சிறப்புரை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில்; 1936ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூகம் தவறுதலாக எஸ்சி பட்டியலில் சேர்க்கப்பட்டது.
இன்று அந்த வரலாற்று தவறை சரி செய்து தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை ஓபிசி லிஸ்டில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக இந்திய அரசியல் சாசனத்தின் 341 (2)ன் கீழ் மத்திய அரசுக்கு தேவையான பரிந்துரையை தமிழக அரசு வழங்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார். குமார் என்கிற குணசேகரன் சிறப்புரையாற்றினார். நலங்கிள்ளி நன்றி கூறினார். நிகழ்ச்சியை மருதன் தொகுத்து வழங்கினார்.


