Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கீழப்புனவாசல் மெயின்ரோடு பகுதியில் வாய்க்காலை தூர்வார வேண்டும்

தஞ்சாவூர், செப்.10: கீழப்புனவாசல் மெயின்ரோடு பகுதியில் புதர் மண்டிக் கிடக்கும் வாய்க்காலை தூர்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு கீழப்புனவாசல் மெயின் ரோடு பகுதியில் பாசன வாய்க்கால் ஆகவும், வடிகால் பகுதிக்கு செல்லும் மானியகன்னி வாய்க்கால் வாழைக்கட்டை வாய்க்கால் வடிகாலாக வந்து பெரிய ஓடையில் சேருகிறது. இந்த வாய்க்கால்கள் மூலம் விவசாயிகள் சுமார் 100 ஏக்கருக்கும் மேல் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த வாய்க்கால் தற்போது புல், செடி கொடிகள் மண்டி காணப்படுகிறது. டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்தால் வடிகால் பகுதி வரை தண்ணீர் செல்ல முடியாத அளவுக்கு 1.5 கி.மீ. தூரம் வரை புதர் போல் மண்டி கிடக்கிறது. எனவே, பாசன தண்ணீர் வருவதற்குள் இந்த வாய்க்கால் பகுதிகளை 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தூர்வார அதிகாரிகள் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.