தஞ்சாவூர், அக்.9: திருவையாறு உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் தாசில்தார் பிரேம்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி (எஸ்ஐஆர் )நிறைவடைந்துள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், இளம், முதல்முறை வாக்காளர்களாக தகுதி பெற்றவர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தஞ்சாவூர் மாவட்ட தேர்தல் அலுவலர்அறிவுறுத்தலின் படி, திருவையாறு சட்டசபை தொகுதி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நாளை 10ம் தேதி (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறுகிறது. எனவே முதல்முறை, இளம் வாக்காளர்கள் மேற்கண்ட சிறப்பு முகாமினை பயன்படுத்தி கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கணபதி அக்ரகாரம் சுற்றுபுற பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களை பயிரிட்டு வருகிறோம். இதற்காக ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தண்ணீர் பாய்ச்சி வருகின்றோம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இங்குள்ள மின் மோட்டார்களில் மின்சார வயர்கள் திருட்டு போனது.


