ஒரத்தநாடு, செப்.9: பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மதுக்கூர் வட்டத்தில் உள்ள சிரமேல்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி பரிந்துரையின் பேரில், மாநிலங்களவை உறுப்பினர் இளங்கோ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.56 லட்சம் மதிப்பிலான மூன்று வகுப்பறை கட்டிடம் நேற்று திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் பழனிவேல், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ மற்றும் மெய்யநாதன், பொதுக்குழு உறுப்பினர் ரூஸ் வேர்ல்ட், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் அருண், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் கருணாகரன் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


