Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

ஒரத்தநாடு சப்-டிவிஷன் காவல் நிலையங்களில் கூடுதல் காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஒரத்தநாடு, செப்.9: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சப் டிவிஷனில் சுமார் நான்கு காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. கூடுதலாக நான்காண்டு காலமாக மகளிர் காவல் நிலையமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரத்தநாடு, பாப்பாநாடு, திருவோணம், வாட்டாத்தி கோட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் போதுமான காவலர்கள் இல்லாததால் பல்வேறு பணிகள் கிடப்பில் போடப்படுவதாக கூறப்படுகிறது. பொதுமக்கள் கொண்டு வரும் மனுக்களில் உரிய விசாரணை மற்றும் நடவடிக்கை எடுப்பதில் தாமதமும் உள்ளது.

இந்நிலையில், அவ்வப்போது நடைபெறும் அரசியல் கூட்டங்கள், அரசியல் தலைவர்கள் வருகை, திருவிழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு பணிக்கு காவலர்கள் சென்று விடுவதால் காவல் நிலையங்களில் காவலர்கள் இல்லாமல் பொதுமக்களின் மனுக்கள் பெறப்படாமல் அலைக்கழிக்கப்படுவதாகவும், உடனடியாக திருச்சி மண்டல ஐஜி, ஒரத்தநாடு சப் டிவிஷனில் உள்ள நான்கு காவல் நிலையங்களுக்கும் கூடுதலான காவலர்கள் நியமிப்பதுடன், பொதுமக்களின் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.