Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பாபநாசம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு கலந்தாய்வு கூட்டம் டிஎஸ்பி தலைமையில் நடைபெற்றது

தஞ்சாவூர், செப்.9: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து அமைப்பாளர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாபநாசம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் முருகவேல் தலைமை தாங்கினார். வருகின்ற 14.9.2026 அன்று விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு அமைதியான முறையில் அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி நடத்துவது குறித்து பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இந்த கூட்டத்தில் பாபநாசம், அய்யம்பேட்டை, கபிஸ்தலம், அம்மாபேட்டை, மெலட்டூர் ஆகிய காவல் சரகங்களை சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள் சப்-இன்ஸ்பெக்டர்கள், அனைத்து ஊர் விநாயகர் கமிட்டி அமைப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.