Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சையில் ரயில்வே ஊழியர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

தஞ்சை, அக்.8: தஞ்சை ரயில் நிலைய முதலாவது நடைமேடையில் உள்ள நிலைய மேலாளர் அலுவலகம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து ரயில்வே ஊழியர்கள், சிஐடியு அமைப்பினர் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை கிளை தலைவர் மெய்யப்பன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் சந்திரோதயம் முன்னிலை வகித்தார். அப்போது, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

12 மணிநேரம் வேலை வாங்குவதை கைவிட வேண்டும். ரயில்வே ஊழியர்களுக்கு விடுமுறை மறுக்கப்படுவதை கைவிட வேண்டும். 78 நாட்கள் போனஸ் என்று கூறி 14 வருடங்களாக ஒரே போனஸ் கொடுத்து ஊழியர்களை ஏமாற்றுவதை கண்டித்து கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ரயில்வே ஊழியர் சங்க நிர்வாகிகள் தனபால், ரஜினி, காசி மற்றும் சிஐடியு மாவட்ட துணை செயலாளர் அன்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.