Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தஞ்சையில் தனியார் பஸ்களில் கட்டணம் ரூ.4 உயர்வு வேலைக்கு செல்வோர் மாணவர்கள் அதிர்ச்சி

தஞ்சை, அக்.8: தமிழகத்தில் புறநகர் பேருந்துகளிலும் கட்டணமின்றி மகளிர் செல்வதற்கான வெற்றி பயணத் திட்டத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். இதில் வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் பெருமளவில் பயனடைந்துள்ளனர். இதன் காரணமாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் மிகப்பெரிய இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். எனவே வருவாய் இழப்பை ஈடு செய்யும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு வழித்தடங்களில் தனியார் பேருந்து கட்டணத்தை கணிசமாக உயர்த்தி உள்ளனர்.

குறிப்பாக, பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திற்கு 31 ரூபாய் வசூலித்த நிலையில் தற்போது 4 ரூபாய் உயர்த்தி 35 ரூபாய் வசூலித்து வருகின்றனர். இதே போல் பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சை புதிய பேருந்து நிலையத்திற்கு 36 ரூபாய் வசூலித்த நிலையில் தற்போது 40 ரூபாயாக உயர்த்தியுள்ளனர். மற்ற வழித்தடங்களிலும் இதே போல் 4 ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்வோர், கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே தமிழக அரசு கட்டண உயர்வு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.