Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பூதலூர் வட்டத்தில் ஜமாபந்தி நடைபெற்றது

திருக்காட்டுப்பள்ளி, ஜூன் 6: தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டத்தில் ஜமாபந்தி என்கிற 1435ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் தஞ்சாவூர் கோட்டாட்சியர் நித்யா தலைமையில் பூதலூர் வட்ட அலுவலகத்தில் தொடங்கியது. பூதலூர் வட்டத்தில் அகரப்பேட்டை சரகத்தை சேர்ந்த தோகூர், பாதிரகுடி, கோவிலடி, திருச்சினம்பூண்டி, மகாதேவபுரம், கச்சமங்கலம், மேகளத்தூர், அகரப்பேட்டை, ராஜகிரி, உஞ்சினி, ரெங்கநாதபுரம், நேமம்,

பழமார்நேரி, அலமேலுபுரம் ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பூதலூர் வட்டாட்சியர் விவேகானந்தன், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் சுந்தரச்செல்வி, அகரப்பேட்டை சரக வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியரிடம் வழங்கினர்.