Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

விவசாய நிலத்தில் காப்பர் வயர் திருடிய மர்மநபர்களுக்கு வலை

ஒரத்தநாடு, செப். 5: ஒரத்தநாடு அருகே விவசாயி பயன்படுத்திய பம்பு செட்டின் காப்பர் வயர்கள் திருடிய மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாப்பட்டு வடக்கு, கண்டியின் தெரு மாணிக்கம். இவரது மகன் செல்வதுரை (46). இவருக்கு சொந்தமான அதே ஊரில் விவசாய நிலத்திற்காக பயன்படுத்தப்பட்டு வரும் பம்பு செட்டு மோட்டாருக்கு பயன்படுத்திய காப்பர் கம்பி வயர்களை கடந்த 3ம் தேதி நள்ளிரவு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

அடுத்த நாள் அதிகாலையில் விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக வந்தபோது பம்பு செட் மோட்டார் மற்றும் பியூஸ் கேரியர்கள் திருடப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து காப்பர் கம்பி வயர்களை திருடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.