கும்பகோணம், செப்.5: அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. தமிழக அரசின் உயரிய விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதினை ஆடுதுறை தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முனைவர் வெற்றி திருநாவுக்கரசு பெற உள்ளார்.
அவருக்கு பேரூராட்சி சார்பில் தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமையில் சால்வை அணிவித்து பாராட்டினர். அப்போது பேரூராட்சி துணைத்தலைவர் கமலா சேகர், பேரூராட்சி செயல் அலுவலர் முத்துக்கண்ணு, பேரூராட்சி உறுப்பினர் மீனாட்சி முனுசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நசீர் முகமது உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


