தஞ்சாவூர், செப். 5: பாபநாசத்தில் அட்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சியளிக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாரத்தில் அட்மா திட்டம் 2026-27 கீழ் 40 விவசாயிகளுக்கு பயிர் பல் வகைப்படுத்துதல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சியளிக்கப்பட்டது. பாபநாசம் வட்டார பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் ராஜதுரை தலைமை தாங்கினார்.
பயிற்சியில் எம் .எஸ் சுவாமிநாதன் அறக்கட்டளை நிறுவன துணை பேராசிரியர்கள் பாரதிதாசன், முருகன் ஆகியோர் விவசாயிகளுக்கு நெல்லுக்கு பின் உளுந்து ஒருங்கிணைந்த பண்ணையம் பல பயிர் சாகுபடி முறை கலப்பு பயிர் முறை பற்றி கூறினர். பயிற்சி முகாமில் வேளாண்மை துணை அலுவலர் நெல் பயிருக்கு பூச்சி மேலாண்மை பற்றி விளக்கினர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை உதவி அலுவலர்கள் சதீஷ்குமார், உதவி தொழில் நுட்ப மேலாளர் நித்யா செய்திருந்தனர். நிறைவாக தொழில்நுட்ப மேலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.


