தஞ்சாவூர், ஆக.5: 61 ஊராட்சிகளில் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் எடுத்தால் இணைப்பு துண்டிக்கப்படும் என வட்டார வளர்ச்சி அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து தஞ்சை வட்டார வளர்ச்சி அதிகாரி (கிராம ஊராட்சி) தனி அலுவலர் கூறியதாவது: தஞ்சை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 61 கிராம ஊராட்சிகளில் குடிநீர் திட்டத்தில் பொதுமக்கள் தங்கள் வீட்டு குடிநீர் குழாய்களில் நேரடியாக மின்மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பதை தவிர்க்க வேண்டும். தவறும்பட்சத்தில் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்து குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement
