தஞ்சாவூர், ஆக.5: தஞ்சை அரண்மனை வளாகத்தில் உள்ள அரசர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தஞ்சை மாவட்ட காவல்துறை மற்றும் பள்ளி கல்லூரி தறை சார்பில் போதை பொருள் ஒழிப்பு பேரணி நேற்று நடைபெற்றது. இந்த பேரணியை தஞ்சை போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர் பிரகதீஸ்வரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
இந்த பேரணி தஞ்சை அரசர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி நான்கு வீதிகள் வழியாக மீண்டும் பள்ளிக்கு வந்தடைந்தது. தாரை, தப்பட்டைகள், மயிலாட்டம், ஒயிலாட்டம், மங்கள வாத்தியம் ஆகிய இசைகளுடன் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் போதைப்பொருள் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். போதைப் பொருட்களை பயன்படுத்தக் கூடாது உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டது.


