ஒரத்தநாடு, பிப்.5: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் பாப்பாநாடு கிராமத்தில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையில் ஆர்.வி.எஸ் வேளாண்மை கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவிகளின் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கோழி, ஆடு, மாடுகள் மற்றும் நாய்களுக்கான நோய் தடுப்பூசிகள் மற்றும் நோய்களுக்கான மருந்துகள் வழங்கப்பட்டன.
குறிப்பாக ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம் மற்றும் மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் ஆகியவை நடைபெற்றது. இந்த முகாமில் காமாட்சி, கனிமொழி, கார்த்திகை செல்வி, கவிதா, காவியா கீர்த்தனா, லோக சம்யுக்தா உள்ளிட்ட மாணவிகள் பங்கேற்றனர்.


