Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒரத்தநாடு பகுதிகளில் இன்றும், நாளையும் மின் விநியோகம் நிறுத்தம்

ஒரத்தநாடு, பிப்.5: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மின்பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஒக்கநாடு கீழையூர், ஒக்கநாடு மேலையூர், காவாரப்பட்டு, வன்னிபட்டு கருவாக்குறிச்சி, சமையகுடிக்காடு, குலமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, ஊரணிபுரம் துணை மின்நிலையத்திலும் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ஊரணிபுரம், பாதிரங்கோட்டை, , கொள்ளுக்காடு காட்டாத்தி வெட்டுவகோட்டை, அக்கரை வட்டம், தளிகை விடுதி, உஞ்சிய விடுதி, காரியா விடுதி, கல்வி ராஜன்விடுதி, சிவவிடுதி, திருவோணம், தோப்புவிடுதி அதனை சார்ந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது.