தஞ்சாவூர், நவ. 4: தஞ்சை புறவழிச்சாலையில் இறந்துகிடந்த மயிலை வனத்துறையினர் மீட்டனர். தஞ்சாவூர் விளார் புறவழிச் சாலையில் மயில் ஒன்று இறந்து கிடந்தது. இதனை ஓய்வுபெற்ற இந்திய கடலோர படை அதிகாரி வெற்றிவேல் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் வனத்துறை அலுவலர்கள் இளையராஜா, பிரியா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மயிலை மீட்டனர். மயில் வாகனத்தில் அடிபட்டு இறந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரிக்கின்றனர்.
+
Advertisement


