பேராவூரணி. நவ. 4: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த எழுத்தாளருக்கு தமிழ்நாடு அரசு தமிழ்ச் செம்மல் விருது வழங்கப்பட்டுள்ளது. பேராவூரணி அருகே உள்ள திருப்பூரணிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பெத்தையா (65) இவர், பேராவூரணி பெத்தையன் என்ற பெயரில் ஏராளமான சிறுகதைகளை பிரபல பத்திரிகைகளில் எழுதியுள்ளார். மேலும் இலக்கியத்தரமான நூல்களும் வெளியிட்டுள்ளார். பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே இலக்கிய சொற்பொழிவாற்றி வருகிறார்.
இவரது தமிழ்த்தொண்டினை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசின் 2024ம் ஆண்டுக்கான தமிழ்ச்செம்மல் விருதும், ரூ. 25 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. சென்னை எழும்பூரில் நடைபெற்ற விழாவில் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ச்சுனா, ராஜ்மோகன், வன்னியரசு ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் தஞ்சாவூர் எம்எல்ஏ விஜய் சரவணன், இயல் இசை நாடகமன்றத் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


