Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

செங்கல் சூளை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

தஞ்சாவூர், அக்.4: தென்காசி மாவட்டம் செங்கோட்டை பூலான் இருப்பு கதிரவன் காலனியில் வசிப்பவர் கனகராஜ் மகன் முருகன் வயது (37). கூலி தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி. இவர், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் முருகன் தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம், தட்டுமால், பகுதியில் ஜாபர் அலி என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் கூலி வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், முருகன் தான் வசித்து வந்த கீற்றுக் கொட்டகையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த கபிஸ்தலம் போலீசார் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.