Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

100 நாள் வேலை புதிய சட்டத்தில் வேலைவாய்ப்பை பறித்ததை கண்டித்து மாற்றுதிறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், மார்ச்.4: தஞ்சை பனகல் கட்டிட வளாகத்தில் நேற்று தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய தலைவர்கள் நாகராஜ், பழனிவேல் ராஜன், பூசைமணி, மாநகரத் தலைவர் மோகன் ஆகியோர் தலைமை தாங்கினர். துணை செயலாளர்கள் ராஜன், சாமியப்பன், பாரதி, ஒன்றிய செயலாளர் மதியழகன், மாவட்டக்குழு தங்கப்பன்,

சிந்து பாரதி, ஒன்றிய பொருளாளர்கள் சிவகுமார் , சக்திவேல், மாநகரக்குழு ராமு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.மாவட்ட செயலாளர்கள் இளங்கோவன் நிறைவுறையாற்றினார். அப்போது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் (100 நாள் வேலை) பெயரை மாற்றியதை கண்டித்தும், புதிய சட்டத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான வேலைவாய்ப்பை பறித்ததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.