Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருவையாறு சாலையோரம் முதியவர் சடலம் மீட்பு

திருவையாறு, பிப் 4: திருவையாறு தேரடி பகுதியில் சாலையோரம் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருவையாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த திருவையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் அன்பு நம்பியார் மற்றும் போலீசார் இறந்த முதியவரின் உடலை மீட்டு திருவையாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்து கிடந்த முதியவர் கட்டம் போட்ட சட்டை, வேட்டி அணிந்து இருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.