Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்!!

தஞ்சாவூர்: தாய்பாலுக்கு நிகரான கள்ளையும், நீராவையும், பதனீரையும் மதிப்புக்கூட்டப்பட்ட பண்டங்களாக மாற்றி, பாட்டில்களில், பவுச்சுகளில், டப்பாக்களில், டின்களில், டெட்ரா பெக்கிங்களில் அடைத்து, உள்நாட்டிலும் உலகளவிலும் சந்தைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தஞ்சை ரயிலடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பனை தொழிலாளர் சங்க தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

இந்திய விவசாயிகள் சங்க கல் ஒருங்கிணைப்பாளர் இந்திய விவசாயிகள் சங்க செயலாளர் நல்லசாமி கண்டன உரையாற்றினார். கட்சி சார்பற்ற தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் சண்முகம் முன்னிலை வகித்தார். புதுக்கோட்டை தமிழக விவசாய சங்க தலைவர் மிசா மாரிமுத்து, புதுக்கோட்டை மாவட்ட விவசாய சங்க செயலாளரவி உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பங்கேற்று கழுத்தில் கோரிக்கை அடங்கிய பதவிகளை அணிந்தபடி கண்டனம் வழங்கும் விட்டனர்.

பின்னர் நல்லசாமி அளித்த பேட்டியில் கூறியதாவது: காவிரி தீர்ப்பு ஒரு கானல் நீர். நடைமுறைப்படுத்தவே முடியாது. நடப்பு ஆண்டு கர்நாடகாவில் குருவை சாகுபடி சாத்தியமானது. தமிழ்நாட்டில் சாத்தியமாகவில்லை. இதற்கு என்ன காரணம்? தீர்ப்பில் இருக்கக்கூடிய தவறுதான் காரணம். மாகாண அடிப்படையிலான நீர் பங்கீடு என்ற அம்சம் தீர்ப்பில் இடம்பெற்றிருக்கும் வரை, கர்நாடகாவினுடைய வடிகாலாகத்தான் தமிழ்நாடும் புதுச்சேரியும் இருக்க வேண்டியிருக்கும். இதற்கு ஒரே தீர்வு, தினந்தோறும் நீர் பங்கீடு. ஒரு சொட்டு நீர் கூட கர்நாடக நீர் தேக்கங்களில் தேக்கக்கூடாது. அது மேட்டூர் அணையில் மட்டுமே தேக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை 28 ஆண்டு கால சட்டப் போராட்டத்தின் மூலம் பெற்றிருந்தால், எதற்காக இரு மாநில உறவு கெடுகின்றது? எதற்கு மோதல் போக்கு வருகின்றது? எதற்கு இறையாண்மை உரிமைப்பாடு கேள்விக்குறியாகிறது? இந்தத் தீர்ப்பு திருத்தப்பட வேண்டும்.

தமிழ்நாடு அரசு உடனடியாக ஒரு மறுசீராய்வு மனுவை காவிரி நதிநீர் மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியும் என யார் வந்து நிரூபித்தாலும், நாங்கள் ரூ. 10 கோடி பரிசை கொடுக்கின்றோம்.  எதற்காக 2033 வரை காத்திருக்க வேண்டும். 28 ஆண்டு கால சட்டப் போராட்டம், அதற்குப்பின்னால் 8 ஆண்டுகள். இந்த 36 ஆண்டுகளில் கர்நாடகா எப்போது திறந்துவிட்டது? இனிமேல் தேக்கினால் கர்நாடக நீர் தேக்கங்கள் உடையும் என்ற அடிப்படையில், அணைகளின் பாதுகாப்பைக் கருதித்தான் திறந்திருக்கின்றனரே ஒழிய, தமிழகமும் புதுச்சேரியும் காவிரியில் கடைமடை உரிமையுடைய மாநிலங்கள் என்பதை நினைவில் கொண்டு நேற்று திறக்கவில்லை, இன்று திறக்கவில்லை, நாளை திறக்கப்போவதில்லை.

ஆகவே, இந்தத் தீர்ப்பு திருத்தப்பட வேண்டும். இந்தத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியும் என யார் வந்து நிரூபித்தாலும், 10 கோடி ரூபாய் பரிசை நாங்கள் கொடுக்கத் தயாராக இருக்கின்றோம். அதனால், எதற்காக இந்தத் தீர்ப்பு? இந்தக் கேள்விக்கு என்ன பதில்? எங்கே பதில்? அடுத்து, கல் தடை நியாயமானதே என முதலமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ, அரசியல் கட்சித் தலைவர்களோ வந்து நிரூபித்துவிட்டால், ரூ. 10 கோடி பரிசு அவர்களுக்கு வழங்கப்படும்.

தமிழக முதலமைச்சர் அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து, கல் தடையை நீக்கி அறிவிக்க வேண்டும். இது முடியாது என்றால், கல்லேற்றுடன் வந்து வாதிட்டு, கள் தடை நியாயமானதே என நிரூபிக்க வேண்டும். இந்த இரண்டுக்கும் முதல்வர் தரப்பு தயாராக இல்லை என்றால், அந்த முதல்வர் பொறுப்பிலிருந்து விலகுவதுதான் தமிழ்நாட்டுக்கு நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.