தொழிலாளர் தொகுப்பு சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்பு
தஞ்சாவூர், டிச.10: ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 4 தொழிலாளர் தொகுப்பு சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி தஞ்சையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆங்கிலேயர் ஆட்சி காலம் தொடங்கி சுதந்திர இந்தியாவில் போராடி பெற்ற 44 தொழிலாளர் சட்டங்களை வெறும் 4 சட்ட தொகுப்புகளாக மாற்றி உள்ளதை எதிர்த்தும், அதனை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தியும் தஞ்சையில் சிபிஐஎம், சிபிஐ, விசிக, சிபிஐ எம்எல் லிபரேசன் ஆகிய கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை தலைமை தபால் நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சிபிஐ மாவட்ட செயலாளர் சக்திவேல், சிபிஐஎம் மாவட்ட செயலாளர் சின்னை பாண்டியன், விசிக மாநகர மாவட்ட செயலாளர் இடிமுரசு இலக்கணன், சிபிஐஎம்எல் லிபரேஷன் ராஜேந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.


