Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

உழவர் சந்தைகளில் சனிதோறும்; வேளாண் விளை பொருள்கள் விற்பனை

தஞ்சாவூர், நவ.3: தஞ்சாவூர் மாவட்ட உழவர் சந்தைகளில் சனிக்கிழமை தோறும் இயற்கை வேளாண் விளைபொருள்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலும் , நஞ்சில்லா காய்கறிகள், பழங்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில், தமிழகத்தில் உள்ள உழவர் சந்தைகளில் இயற்கை வேளாண் பொருட்களை வாரந்தோறும் சந்தைப்படுத்துதல் தொடர்பான அறிவிப்பை தமிழக வேளாண்துறை அமைச்சர் அவர்கள் வேளாண் நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டார்கள்,அதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள (தஞ்சாவூர், திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி) அனைத்து உழவர் சந்தைகளிலும் இயற்கை விளைபொருட்கள் விற்பனைக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது,

எனவே இயற்கை விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்திட தங்களுக்கு அருகில் உள்ள சந்தைகளில் விண்ணப்பித்து அடையாள அட்டை பெற்று விற்பனை செய்து பயன் பெறலாம் ,இதில் பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள் , பயறுகள், காய்கறிகள், பழங்கள், மிளகாய், மஞ்சள், மிளகு, மசாலா பொருட்கள், நாட்டுக்கோழி முட்டைகள், தேன் மற்றும் இயற்கை வேளாண் முறைகளின் கீழ் உற்பத்தி செய்யப்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளிலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இயற்கை வேளாண் விளைபொருள் விற்பனை துவங்க உள்ளது, எனவே இயற்கை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி தெரிவித்துள்ளார்.