Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இளம் தலைமுறையின் சவால்கள்; எஸ்.டி.பி.ஐ கட்சி பெற்றோர் விழிப்புணர்வு கருத்தரங்கம்

தஞ்சாவூர், நவ. 3: தஞ்சை மாவட்டம் தத்துவாஞ்சேரியில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மகளிர் அணி சார்பில் இளம் தலைமுறையின் சவால்களும் பெற்றோரின் வழிகாட்டுதலும் என்னும் பெற்றோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது . மாவட்ட தலைவர் நஸ்ரத் பேகம் தலைமை தாங்கினார். விம் கிளைத் தலைவர் ரைஹானா வரவேற்புரை ஆற்றினார். ஜாமிஆ மஸ்ஜித் நாட்டாண்மை ஜாகீர் உசேன், எஸ்டிபிஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் முகமது ஷரீப் , மாவட்டத் துணைத் தலைவர் நூருல் நஸ்ரின் , விம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆமினா, தொகுதி தலைவர் மன்ஞர், தொகுதி செயலாளர் ஜாசர், பொருளாளர் இமாம் அலி, இணைச்செயலாளர் அபுல்ஹசன், கிளைத் தலைவர் நஜீர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் மில்லை சலீம் வாழ்த்துரை வழங்கினார் .‌மாவட்ட பேச்சாளர் ஷாஜிதா விழிப்புணர்வு கருத்துரை வழங்கி பேசினார் .

போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சாவித்திரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதையடுத்து மாநில ஊடக ஒருங்கிணைப்பாளர் அப்துல் பாசித் சிறப்புரையாற்றினார்.இந்தக் கருத்தரங்கில் இளம் தலைமுறையினர் சந்திக்கும் சவால்களும் அதற்கு பெற்றோர் எவ்வாறு வழிகாட்ட வேண்டும் என்பது குறித்து விளக்கி கூறப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் ரிபானா நன்றி கூறினார்.