Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

திருச்சி- தாம்பரம்- நாகர்கோயில் ரயில்கள் பூதலூர் ரயில் நிலையத்தில் நிற்கவேண்டும்

தஞ்சாவூர், அக். 2: பூதலூர் ரயில் நிலையத்தில் திருச்சி-தாம்பரம், நாகர்கோவில்-தாம்பரம் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.திருச்சி- தாம்பரம் வழித்தடத்தில் பூதலூர் வருவாய் அதிகம் தரும் ரயில் நிலையமாக உள்ளது. பூதலூர் அதைச்சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமானோர் சென்னையில் வசித்து வருகின்றனர்.

திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக சென்னை செல்லும் விரைவு ரயில்களில் பகல் நேரத்தில் சோழன் விரைவு ரயிலும், இரவு நேரத்தில் திருச்செந்தூர் விரைவு ரயிலும் பூதலூர் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மதிய வேளையில் பூதலூர் வருவதால் வேலைக்கு செல்வோர் விரும்பாத சூழல் உள்ளது.