Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

மக்கள் தொகை கணக்கெடுப்பு: விழிப்புணர்வு பிரச்சார வாகனம்

தஞ்சாவூர், ஜூலை 31: மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கலெக்டர் துவக்கிவைத்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ல் முதல் கட்டமாக தற்போது நடைபெற்று வரும் சுய கணக்கெடுப்பு பணி தொடர்பாக மருத்துவத் துறையைச் சார்ந்த பணியாளர்களுக்கு மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027ல் முதல் கட்டமாக தற்போது நடைபெற்றுவரும் சுய கணக்கெடுப்பு பணி தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரச்சார வாகனம் மாவட்ட கலெக்டர் ரேவதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணியில் கணக்கெடுப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர்களாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கு அதற்கான பணி நியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார். இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் இளங்கோவன், உதவி ஆட்சியர் (பயிற்சி) சுபாஷ் கார்த்திக், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தவச்செல்வன் ஆகியோர் உடனிருந்தனர்.