திருவிடைமருதூர், அக். 29: திருவிடைமருதூரில் கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக 200 ஏக்கருக்கும் மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகினர்.
திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த வாரம் கனமழை பெய்தது. தஞ்சை மாவட்டம் எல்லை பகுதியான கடலங்குடி, விளாங்குடி அருகே உள்ள முட்டையான் வாய்க்காலை தூர்வார வேண்டும். வாய்க்கால்களில் செல்ல வேண்டிய மழை நீர் விவசாய வயல்கள் வழியாக செல்கிறது.

