தஞ்சாவூர், அக்.28: தஞ்சை வார்டு எண் 45ல் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் தஞ்சாவூர் மாநகராட்சி வார்டு சிறப்பு கூட்டம் மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மேயர் சண்.ராமநாதன் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதில் 45 வது வார்டில் உள்ள தங்கள் கோரிக்கையான நடராஜபுரம் இரண்டாம் தெருவில் உள்ள புதிய சாலை அமைத்துத் தர வேண்டும். பாதாள சாக்கடை மூடிகளை பாதுகாப்பான முறையில் மற்றும் மழைநீர் தேங்காத வகையில் சீர் செய்து தர வேண்டும் என கோரிக்கை வார்டு சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
குறைபாட்டை உடனடியாக சரி செய்யுமாறு மேயர் சண்.ராமநாதன் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் 45 வட்ட செயலாளர் சுரேஷ் ரோச், வார்டு பிரதிநிதிகள் விவேகானந்தன், ஹரி, அவை தலைவர் மகாதேவன், நகராட்சி அலுவலர்கள் முருகன், ராமச்சந்திரன், மணிகண்டன், வடிவேலு, பிரபாகரன், மாயக்கண்ணன் மற்றும் குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

