Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வெப்ப தாக்கத்தை சமாளிக்க தஞ்சாவூர் பெரியகோயிலில் பக்தர்கள் செல்லும் பாதையில் தண்ணீர் தெளிப்பு

தஞ்சாவூர், செப்.28: தஞ்சாவூர் பெரிய கோயிலில் பொதுமக்கள் நடப்பதற்காக நடைபாதைகளில் உள்ள விரிப்புகளில் தண்ணீர் அடிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளூர், வெளியூர், வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தருகின்றனர். அதேபோல் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தந்து தஞ்சை பெரியகோயிலின் கட்டிடக்கலையை பார்த்து வியந்தபடி செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். தற்போது வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் பெரிய கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிரமமின்றி நடப்பதற்காக கோயில் வெளி பிரகாரங்களில் கோயில் ஊழியர்கள் பைப் மூலம் தண்ணீர் தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பணி காலை, மதியம், மாலை ஒரு முறை என மூன்று முறை செய்யப்படுகிறது.

அதேபோல் பக்தர்களின் வசதிக்கேற்ப தரை விரிப்பும் போடப்பட்டுள்ளது. பகல் பொழுதில் அதிகமாக வெப்பம் இருப்பதால், பக்தர்கள் வெறும் காலில் நடந்து செல்வதில் சிரமம் இருக்கும். இதற்காக கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் நடந்து செல்லும் வகையில் தேங்காய் நார் விரிப்புகள் விரிக்கப்பட்டுள்ளன. அதன்மீது நடந்து செல்லும் பக்தர்களுக்கு கால் சுடாமல் இருக்க தண்ணீரை பீய்ச்சி அடிக்கப்படுகிறது. தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் நேற்று தஞ்சை பெரிய கோயிலில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரமாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

பெரியகோயிலின் அழகையும், கட்டடக்கலையும், சிற்பக்கலையும் ரசித்து செல்கின்றனர்.

பெரியகோயிலுக்கு அதிக பக்தர்கள் வந்ததால் கார்கள் அனைத்தும் பெரிய கோயில் எதிரே உள்ள வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தப்பட்டடிருந்தது. மேலும் அங்கு போதிய இடவசதி இல்லாததால் சாலையில் ஓரங்களில் கார்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. பெரியகோயிலுக்கு நாளுக்கு நாள் பொதுமக்கள் அதிக அளவில் வருவதால் வாகனங்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.