தஞ்சாவூர், செப்.26: தஞ்சையில் நேற்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ரேவதி தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பேசினர்.தங்கவேல்: பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து ஒரு மாதம் காலம் ஆகி உள்ளது. ஆனால் கல்லணை கால்வாய் இருந்து தண்ணீர் இருந்தும் இதுவரை கடைமடை பகுதிகளுக்கு முழுமையாக தண்ணீர் செல்லவில்லை. இதேபோல் நீர்வளத் துறைக்கு சொந்தமான ஏரி குளங்களிலும் தண்ணீர் இல்லாததால் கால்நடைகளும் குடிநீர் தட்டுப்பாட்டால் மிகவும் அவதி அடைந்து வருகிறது. எனது இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றோம் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.எனவே மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
+
Advertisement


