Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

ஒரத்தநாடு அருகே பெண் சர்வேயர் மீது தாக்குதல்

ஒரத்தநாடு, செப்.26: ஒரத்தநாடு அருகே பெண்நில அளவையரை தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள திருவோணம் தாலுகா திருநல்லூர் சக குறுவட்ட அளவைய பணிபுரிந்து வருபவர் ஜெயலட்சுமி (44). இவர் நேற்று முன்தினம் பாப்பாநாடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் தெரிவித்ததாவது;திருவோணம் வட்டத்தில் திருநள்ளூர் சரக குறுவட்ட அளவராக பணிபுரிந்து வருகிறேன்.

நேற்று முன்தினம் சங்கரநாதன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்ற மனுதாரர் இணைய வழியில் எல்லை அளக்க மனு செய்திருந்தார். அதன் பெயரில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு அளவீடு செய்ய சென்று அளவீடு பணி முடிந்து வீடு திரும்பியதற்காக பஸ் ஏறும்போது வடக்கு கோட்டை ராஜா மடம் வாய்க்கால் அருகில் காத்திருந்தேன்

அப்போது, புல எண் 1042/58ல் உள்ள வடக்கு புலத்தின் எல்லைக்காரரான வடக்கு கோட்டை கிராமம், வடக்கு தெருவில் வசித்து வரும் சாமிக்கண்ணு (65) என்பவர் வேகமாக வண்டியில் வந்து என் தலையில் பலமாக அடித்தார். பின்னர் கீழே இருந்த தென்னம்பாளை எடுத்து என்னை தாக்கினார். மேலும் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். ஆகவே மேற்கண்ட நபரை கைது செய்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.