Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மகாமக திருவிழாவை முன்னிட்டு தஞ்சை-கும்பகோணம் நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்படுமா?

தஞ்சாவூர், செப்.26: தென்னகத்தின் கும்பமேளா என்று அழைக்கப்படும் மகாமக திருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சாவூர் மாவட்டத்தில் முக்கிய மாநகரமாக விளங்கும் கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர், பாபநாசம்,அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அரசு அதிகாரிகள், அலுவல் நிமித்தமாக தினந்தோறும் தஞ்சை, கும்பகோணத்திற்கு வந்து செல்வதற்கும், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வதற்கும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.

சுவாமிமலை முருகன் கோயில், திருக்கருகாவூர் கற்பகரச்சாம்பிகை கோயில், பாபநாசம் 108 சிவாலயம் ராமலிங்க சுவாமி திருக்கோயில், திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில், தஞ்சை பெரிய கோயில், புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில் ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளும் இந்த தஞ்சாவூர்- கும்பகோணம் சாலையை தான் பயன்படுத்துகின்றனர்.