Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாநகராட்சி தூய்மை பணி தனியார்மயம்: தவெக அரசை கண்டித்து ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்

தஞ்சை, ஜூன் 26: தஞ்சை மாநகராட்சி அலுவலகம் முன் ஏஐடியுசி உள்ளாட்சி பணியாளர் சங்கத்தினர், தூய்மை பணி தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகளில் தூய்மை பணி மற்றும் டிரைவர் பணிகளை தனியாருக்கு விடும் அரசின் அறிவிப்பை கண்டிப்பது, தூய்மை பணியாளர்களுக்கு தினசரி சம்பளம் ரூ.762 வழங்க வேண்டும். டிரைவர்களுக்கு ரூ.802 வழங்க வேண்டும். கையுறை உள்ளிட்ட உபகரணங்கள், வார ஓய்வு வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார். நிர்வாகிகள் கலியபெருமாள், ஆனந்த் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை ஏஐடியுசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார் துவக்கி வைத்தார். உள்ளாட்சி சங்க மாநில துணைத்தலைவர் தர்ம.கருணாநிதி கண்டன உரை

யாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி மாவட்ட தலைவர் சேவையா, மாவட்ட செயலாளர் துரை. மதிவாணன், தெரு வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் முத்துக்குமரன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்ட தலைவர் அழகு தியாகராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு: புதிய அரசு செவி சாய்க்குமா?

இது குறித்து மாளியக்காடு கிராமத்தைச் சேர்ந்த குமரவேல், வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோர் கூறுகையில்; இதுபோன்ற மழை, வெள்ளக் காலங்களில் எங்களது நெற்பயிர்களை பார்க்கக்கூட எங்களால் செல்ல முடியாது. உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறோம். இந்த மகாராஜசமுத்திரம் காட்டாற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர புதிய அரசை கேட்டுக்கொள்கிறோம். இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இவர்களின் கோரிக்கைக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு செவி சாய்க்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.