தஞ்சாவூர், செப்.25: தஞ்சாவூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியால் குத்தி 5 பவுன் தாலி செயினை பறித்து சென்ற ரஷ்யா மருத்துவ மாணவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் அம்மாபேட்டை உக்கடை சாலை நேதாஜி காலனியை சேர்ந்தவர் குமார். லாரி டிரைவரான இவர், சென்னையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மூக்காயி (45). இந்நிலையில் நேற்று மதியம் மூக்காயி வீட்டுக்குள் வாலிபர் ஒருவர் நுழைந்துள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மூக்காயி கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி செயினை பறிக்க முயன்றார்.
அப்போது மூக்காயி சத்தம் போட்டுக்கொண்டே தடுத்தபோது அந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மூக்காயியின் கழுத்தில் குத்திவிட்டு ெசயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடியதோடு அருகில் உள்ள குளத்தில் குதித்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து தாக்கியதோடு அம்மாபேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.


