Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மன்னர் சரபோஜி பிறந்தநாளில் விதை நடவு: பனை வளத்தை அதிகரிப்பதால் இயற்கை வளங்களைப் பாதுகாக்கலாம்

வல்லம், செப்.25: தேசிய நாட்டு நலப்பணித் திட்டதினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் அருகே கள்ளப்பெரம்பூர் செங்கழுநீர் ஏரியில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. ஒரு கோடி பனை விதைகள் நடும் தொடர் பணியின் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மாவட்டம் கள்ளப்பெரம்பூர் செங்கழுநீர் ஏரியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களால் ஒரு லட்சம் பனை விதைகள் ஏரியின் 11 கிலோ மீட்டர் சுற்றளவில் நடப்பட்டது.நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் ரேவதி துவக்கி வைத்து பேசுகையில், பனை மரங்கள் தமிழகத்தின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்று. நீர்நிலைகள் மற்றும் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை, பனை வளத்தை அதிகரிப்பதன் மூலம் எதிர்கால தலைமுறைக்கு இயற்கை வளங்களைப் பாதுகாக்க முடியும் என்று தெரிவித்தார்.

தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, எம்எல்ஏக்கள் திருவையாறு துரை. சந்திரசேகரன், தஞ்சை விஜய் சரவணன், மாவட்ட வன அலுவலர் கார்த்திகாயினி, தஞ்சாவூர் மேயர் (பொ) அஞ்சுகம் பூபதி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் தீபனா விஸ்வேஸ்வரி, மாநில நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் குணாநிதி, பாரதிதாசன் நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமஜெயம், செங்கழுநீர் ஏரி சீரமைப்பு குழுவைச் சார்ந்த மேனாள் முன்னாள் தஞ்சை மருத்துவக் கல்லூரி செயலாளர் மருத்துவர் குணசேகரன், மாவட்ட பொறியாளர் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தைச் சார்ந்த வேதா, செங்கழுநீர் ஏரி சீரமைப்பு குழு தலைவர் குலோத்துங்கன், கவின்மிகு தஞ்சை இயக்கத்தைச் சார்ந்த மருத்துவர் ராதிகா மைக்கேல், தஞ்சை அறிவுசார் நூலகம் மதியுரைஞர் சுகுமாரன், காமாட்சி மருத்துவமனை மேலாண்மை இயக்குனர் டாக்டர் இனியன் ஆகியோர் பங்கேற்றனர்.