Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

விடுபட்டுள்ள உறுப்பினர்களை சேர்த்து இந்தியன் செஞ்சிலுவை சங்க தேர்தலை நடத்த வேண்டும் முன்னாள் ரெட் கிராஸ் தலைவர் தாசில்தாரிடம் மனு

திருவிடைமருதூர், ஜூன் 25: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் இந்தியன் செஞ்சிலுவை சங்க தேர்தல் வருகிற 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் விடுபட்டுள்ள உறுப்பினர்களை சேர்த்து பின்னர் தேர்தல் நடத்த வேண்டும் என முன்னாள் ரெட் கிராஸ் தலைவர் பாஸ்கரன் உள்ளிட்ட சிலர் தாசில்தாரிடம் கோரிக்கை வைத்தனர். திருவிடைமருதூர் தாலுகா அலுவலகத்திற்கு வருகை தந்த முன்னாள் ரெட் கிராஸ் தலைவர் பாஸ்கரன் மற்றும் உறுப்பினர்களான திருபுவனம் பாஸ்கர், ஆடுதுறை பைஸ் அகமது உள்ளிட்ட சிலர் வட்டாட்சியர் சாந்தமீனாவை சந்தித்து தேர்தல் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை கூறினர். அப்போது, 28 உறுப்பினர்களின் பெயர் விடுபட்டுள்ளது எனவும், அதனை சேர்த்து தேர்தல் அலுவலர் தனியாக நியமித்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.