Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் பி.எஸ்.என்.எல். சிம்கார்டு விற்பனை

தஞ்சாவூர், மே 25: தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் பி.எஸ்.என்.எல். சிம்கார்டு விற்பனையை பொதுமேலாளர் பாலசந்திரசேனா தொடங்கி வைத்தார். தஞ்சை வணிகப்பகுதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் சார்பில் சிம்கார்டு விற்பனை சேவைகள் வழங்கப்பட உள்ளன. அதன்தொடக்கமாக தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் பி.எஸ்.என்.எல். சிம்கார்டு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இந்த விற்பனையை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பாலசந்திரசேனா தொடங்கி வைத்தார். இதற்கு தஞ்சை தலைமை தபால் முதுநிலை தலைவர் பழனிசாமி முன்னிலை வகித்தார். இதில் துணைப் பொதுமேலாளர் ராஜகுமார், உதவி பொதுமேலாளர் தேவிபிரியா, இளநிலை தொலைத்தொடர்பு அலுவலர் சரவணகுமார் மற்றும் தபால் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர்.