Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

தஞ்சாவூர் ரெட்டிபாளையம் சியாமளா தேவி அம்மன் கோயில் பால் குட திருவிழா

தஞ்சாவூர், மே 25: தஞ்சாவூர் ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள சியாமளா தேவி அம்மன் ஆலய 40ம் ஆண்டு பால் குட திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செய்தனர். தஞ்சாவூர் அடுத்த ரெட்டிபாளையம் பகுதியில் சியாமளா தேவி அம்மன் ஆலயம் உள்ளது. அந்த ஆலயத்தில் நாற்பதாம் ஆண்டு கால்குடை விழா நேற்று நடைபெற்றது. கடந்த 22 ம் தேதி மாலை முளைப்பாறியும், நேற்று காலை காவடி, கரகம் நடைபெற்றது.

காவடியானது காலை கோவில் அருகே உள்ள குளத்திலிருந்து புறப்பட்டு ரெட்டி தெரு, சக்கராம்பேட்டை, ரெட்டிபாளையம் உள்ளிட்ட முக்கிய வழிகளாகச் சென்று மீண்டும் கோவில் வந்து அடைந்தது. பக்தர்கள் எடுத்த பால்குடம் அனைத்தும் சியமளா தேவி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.