பேராவூரணி, செப்.23: தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான தஞ்சாவூர் மாவட்ட அளவிலான பெண்களுக்கான பொதுப் பிரிவு கையுந்து பந்து போட்டியில் பேராவூரணி அணி முதலிடம் பெற்றுள்ளது. தஞ்சாவூர் சத்யா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அணிகள் பங்கேற்ற நிலையில் பேராவூரணி அணியினர் முதலிடம் பெற்று கோப்பையை வென்றனர். அணித்தலைவர் நிஷா தலைமையில் வெற்றி பெற்ற அணியினரையும், அவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர்கள் பாரதிதாசன், உடற்கல்வி ஆசிரியர் நீலகண்டன் ஆகியோரை எம்எல்ஏ அசோக்குமார் மாநில அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என வாழ்த்தினார்.
+
Advertisement


