Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

100 ஏக்கர் பாதிப்பு தஞ்சையில் நீர்பாசன வாய்க்காலை மீட்க வேண்டும்

தஞ்சை, செப்.23: 100 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத்திற்கு விவசாயிகள் பயன்படுத்தி வரும் நீர்பாசன வாய்க்காலை தனிநபரிடமிருந்து மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சமுத்திரம் ஏரி பாசன விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் ஒருங்கினைப்பாளர் கோவி.மோகன் தலைமையில் ஒருங்கிணைப்பு கமிட்டி நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் கலெக்டரிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது: தஞ்சை மாவட்டம் புளியந்தோப்பு கிராமத்தில் கல்லணை கால்வாய் (புதுஆறு) சமுத்திர ஏரி தண்ணீர் மூலம் இந்த ஏரியை ஒட்டியுள்ள, கிராம மக்கள் 100 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் 100 ஏக்கர் விவசாய நிலங்களில் இரண்டு தலைமுறைகளுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறோம். இந்த விவசாய நிலங்களுக்கு சமுத்திரம் ஏரி வழியாக வரும் நீர் ஆதாரத்தை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வருகிறோம். தற்போது விவசாய நிலங்களை தூர்த்துவிட்டு வீட்டு மனைகளாக மாற்றி ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவோரின் துணையுடன் தனி நபர் நீர்பாசன வாய்க்காலை முழுவதும் அடைத்து ரெடிமேட் காம்பவுண்ட் அமைத்து வாய்க்காலை முழுவதுமாக மூடிவிட்டார்.