பட்டுக்கோட்டை, செப்.23: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று மாலை அதிரடி ரெய்டு நடத்தினர். தஞ்சை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி அன்பரசன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் தொடங்கிய சோதனை இரவு 9.30 மணி வரை நீடித்தது. சோதனையின் முடிவில் கணக்கில் வராத ரூ.32 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தெரிவித்தார்.
+
Advertisement


