Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

மைதானம் போன்ற காட்சியால் விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர், ஜூன் 23: சேதுபாவாசத்திரம் கடை மடை பகுதிகளில் தண்ணீரின்றி வறண்டுள்ள ஏரி, குளங்கள் விளையாட்டு மைதானம் போல் காட்சி அளிக்கின்றன. நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து வருவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகள் கடைமடை பகுதியில் உள்ளன. மேட்டூர் அணையில் இருந்து முறைப்படி தண்ணீர் திறந்து விட்டாலும், இந்த பகுதியில் உள்ள வாய்க்கால்களை தண்ணீர் தாமதமாகத்தான் சென்றடையும். இந்த ஆண்டு தண்ணீர் இதுவரை திறக்கப்படாத சூழலில் கோடை மழையும் இந்த பகு தியை கைவிட்டு விட்டது.

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கடைமடை பகு தியில் உள்ள ஏரி, குளங்கள் தண்ணீரின்றி வறண்டு விளையாட்டு மைதானம்போல காணப்படுகின்றன. கடந்த 5 ஆண்டுகளாக போதுமான பருவமழையும் பெய்யவில்லை. கடந்த ஆண்டுகளில் மேட்டூர் அணை தண்ணீரை கொண்டு இந்த பகுதியில் உள்ள அனைத்து ஏரி, குளங்களும் நிரப்பபட்டன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைய வில்லை. ஆனால் இந்த ஆண்டு போதுமான கோடை மழையின்றி 80 அடியில் இருந்த நீர் மட்டம் தற்போது 160 அடியை தாண்டிவிட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு குறித்த நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்படவில்லை.

இதனால் கடைமடை பகுதியில் மேலும் நீர்மட்டம் குறைய வாய்ப்பு உள்ளது. அதே சமயம் கடந்த காலங்களில் 60 சதவீத நிலப்பரப்பில் நேரடி விதைப்பும், 40 சதவீத நிலப்பரப்பில் நடவுபணிகளும் நடைபெற்று சம்பா சாகுபடி முழு மையாக நடைபெற்றது. மேலும் மேட்டூர் அணை தண்ணீர் போதுமான அளவு கிடைத்து ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பியது. இதனால் ஏரி பாசன சாகுபடியும் சிறப்பான முறையில் நடைபெற்றது. நிலத்தடி நீர்மட்டம் நன்றாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு தற்போது நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. மழையும் இன்றி, மேட்டூர் அணை தண்ணீ ரும் இன்றி பெரும் கவலையில் இருக்கி றோம் என்றனர்.

தண்ணீரின்றி வறண்ட ஏரி, குளம்,குட்டைகள்: பொதுமக்கள் கேள்வி

மேட்டூர் அணை தண்ணீர் போதுமான அளவு கிடைத்து ஏரி, குளங்கள் அனைத்தும் நிரம்பியது. இதனால் ஏரி பாசன சாகுபடியும் சிறப்பான முறையில் நடைபெற்றது. நிலத்தடி நீர்மட்டம் நன்றாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு தற்போது நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. மழையும் இன்றி, மேட்டூர் அணை தண்ணீ ரும் இன்றி பெரும் கவலையில் இருக்கிறோம்.