Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கலைஞரின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு பார்வைத்திறன் குறையுடையோர் பள்ளியில் அறுசுவை உணவு வழங்கல்

தஞ்சாவூர், ஜுன் 19: தஞ்சாவூர் மேம்பாலம் பார்வைத்திறன் குறையுடையோர் பள்ளியில் கலைஞர் 103வது பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சை மாநகர திமுக சார்பில் மதிய அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் தலைமை வகித்து பள்ளி மாணவர்களுக்கு உணவை பரிமாறினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், மாநகர செயலாளர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி செயலாளர்கள், மாவட்ட ,மாநகர, பகுதி, வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டனர்.