Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

தஞ்சாவூர், மே 19: தஞ்சாவூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை. குடும்ப அட்டை பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 498 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங் கினர். இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.