Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விவசாயிகளுக்கு அதிர்ச்சி தரும் வகையில் உரம் விலை உயர்வு

தஞ்சாவூர், ஜூன் 15: ஜூன் 12 மேட்டூர் அணை திறக்க இயலாத சூழ்நிலையில், முன்பட்ட குறுவை சாகுபடி ஆழ்குழாய் கிணறு மூலம் சாகுபடி செய்துள்ளார்கள். வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றத்தால் விவசாயிகள் பயன்படுத்தும் ரசாயன உரங்கள் பன்மடங்கு விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து உரக்கடைகளிலும் உரவிலை உயர்வு விவசாயிகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. டிஏபி-ரூ 2500, யூரியா-2900, என்.பி.கே காம்பிளக்ஸ் ரூ2500, பொட்டாஷ்-ரூ 2300, சல்பேட்-ரூ1500, சூப்பர்-800 என பல உரங்களும், பூச்சி மருந்துகளும் விலை உயர்ந்துள்ளது. எனவே தமிழக முதல்வர் மீண்டும் இந்திய அரசை வலியுறுத்தி விவசாயிகள் நலனுக்காக உர விலையை குறைத்தும், உரத்தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும்.

மேலும் டீசல் விலை உயர்வால், உழவு செய்ய டிராக்டர் வாடகை, அறுவடை இயந்திர வாடகை, நெல் ஏற்றிச் செல்ல லாரி மற்றும் டிராக்டர் வாடகை, ஆகியவை நிச்சயமாக உயர்த்தப்படும் நிலை உள்ளது. உரவிலை உயர்வு மற்றும் டீசல் விலை உயர்வால், நெல் விவசாயிகளின் உற்பத்தி செலவு பெருமளவில் அதிகரிப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்கள். எனவே தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி நெல் குவின்டாலுக்கு ரூ.3500 உயர்த்தி வழங்குமாறு தமிழக முதல்வருக்கு காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏகேஆர் ரவிச்சந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.