ஆதனக்கோட்டை கிராமத்தில் புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும்: பொதுமக்கள் வேண்டுகோள்
Advertisement
ஒரத்தநாடு, டிச.10: ஒரத்தநாடு அருகே ஆதனக்கோட்டை கிராமத்தில் உள்ள சாலை குண்டும், குழியுமான இருப்பதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆதனக்கோட்டை கிராமத்தில் ஆதி திராவிடர் தெருவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் இருந்து புதுக்கோட்டை மாவட்டத்தை இணைக்கும் சாலை 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரத்தில் பெய்த கனமழை காரணமாக சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது.
Advertisement