கும்பகோணம், பிப்.10: கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆடுதுறை துணை மின்நிலையத்தில் இன்று 10ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் பெறும் ஆடுதுறை, எஸ்.புதூர், நரசிங்கன்பேட்டை, ஆவணியாபுரம், கோட்டூர், கஞ்சனூர், திருலோகி, சாத்தனூர், சூரியனார்கோவில், திருவிடைமருதூர், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
+
Advertisement
