Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்பனந்தாள் அருகே கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் உடைப்பை விரைந்து சீர் செய்ய வேண்டும்: போக்குவரத்து தடையால் மக்கள் கடும் அவதி

திருவிடைமருதூர், ஜூலை 9: தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே பாலாக்குடி பகுதியில் இருந்து திருவள்ளியங்குடிக்கு செல்லும் இணைப்பு சாலை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் குழாயில் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது. அதனை சீரமைக்க குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் சீரமைக்கும் பணிகள் நிறைவேறாத நிலையில் 10 நாட்களை கடந்தும் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் இருந்து வருகிறது. இதனால் இந்த இணைப்பு சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்கள் மாற்று வழியில் செல்லக்கூடிய நிலை உருவாகியுள்ளது.