Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அம்மாபேட்டை கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் விரைந்து கொள்முதல் செய்ய கோரி மார்க். கம்யூ. ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஜூலை 6: அம்மாபேட்டை ஒன்றியத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக கொள்முதல் செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அம்மாபேட்டை ஒன்றியத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக கொள்முதல் செய்யக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு அம்மாப்பேட்டை ஒன்றிய செயலாளர் ரவி தலைமை வகித்தார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் மனோகரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பக்கிரிச்சாமி நம்பிராஜன் ,ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சரவணன் , முனியாண்டி, மயில்வாகனம், கோபாலன் , ராஜேந்திரன்,சேகர் மற்றும் கிளை செயலாளர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.